சோதிடர்களுக்கு ஒரு வேண்டுகோள் (or) சவால்!!!
அருணின்(வால்பையன்) இடுகையில் பின்னூட்டமாக தான் ஆரம்பித்தேன். அங்கே 'Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters' என கூறிவிட்டதால் தனி இடுகையாகிவிட்டது. வேறென்றுமில்லை ;-)
அந்த இடுகை - "எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!..."
உண்மையில் சோதிடம் என்பது ஒரு கட்டுக்கதை தான். ஆனால் நட்சத்திரம் அல்லது கிரகங்களால் இயக்கங்களால் மனிதன் மட்டுமில்லை. அனைத்தின் வாழ்விலும் மாற்றம் உண்டு பண்ண இயலும் என்பது உண்மை. அப்படி நிகழ்ந்தால் அதை எவராலும் கட்டுப்படுத்த இயலாது என்பது அனைத்தையும் விட மிகப்பெரிய உண்மை.
விளக்கமாக சொல்வதனால் சூரியன் ஒரு நட்சத்திரம் தான். அதன் ஒளியைக்கொண்டே தாவரங்கள் தன்னிடமுள்ள பச்சையத்தின் உதவியால் உணவு தயாரிக்கிறது. திடிரென சூரியனின் ஒளி மங்கிவிட்டாலோ, அல்லது ஒளி அதிகரித்து பொசுக்க ஆரம்பித்தாலோ எல்லோரும் காலி தான். சூரியன் ஒன்றும் இலவசமாக ஆற்றலை உருவாக்கவில்லை. அதன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இழந்து (பிணைத்து) ஒரு ஹீலியமாக மாற்றி அந்த பிணைப்பின் போது கிடைக்கும் சக்தியையே நாம் பெறுகிறோம். ஆக இலவசம் என்று ஒன்றுமில்லை.
அது போல குரு எனப்படுகிற வியாழன் கிரகமானது சூரியக்குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்த அளவிலானது. ஆனால் முழுவதும் வாயுவிலானது. கிட்டதட்ட பெரிய சைஸ் பஞ்சு மாதிரி. இதன் அபார ஈர்ப்பு சக்தியால் தான் நம்ம சூரிய மண்டலமே ஒரு வடிவமாக உள்ளது. இந்த செயலால் பல முறை பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் தப்பி பிழைத்துள்ளன.
எப்படியென்றால் சூரியனின் ஈர்ப்பு விசையினால் சூரியனை நோக்கி விண்வெளியில் உள்ள விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை வரும்போது அதை இந்த வியாழன் தனது அபார ஈர்ப்பு சக்தியால் ஈர்த்து தன் மீது மோத விட்டு அதை அழித்துவிடுகிறது. கிட்டத்தட்ட கோல்போஸ்ட்டில் நிற்கும் கோல்கீப்பர் போல. இந்த வேலையை அது July 16, 1994 to July 22, 1994 அன்று சமர்த்தாக ஷூ மேக்கர் லெவி 9 ஐ தன் மீது மோதவிட்டு அழித்தது.
ஷூ மேக்கர் லெவி9 பற்றிய விக்கிபீடியா கட்டுரை -
http://en.wikipedia.org/wiki/Comet_Shoemaker-Levy_9
இந்த கோல்கீப்பர் நம்ம டைனோக்கள் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் சரியாக கவனிக்காமல் இருந்ததால் ஒரு கல் 'பால்; உள்ளே புகுந்து 'கோல்' ஆகி பூமியில் இருந்த பெரும்பாலான உயிரினங்கள் 'பாழ்' ஆகிவிட்டது. இது மறுபடியும் எப்பவேண்டுமானலும் நடக்கலாம். இதை இந்த சிறிய மண்ணுருண்டையான பூமியில் வசிக்கும் எந்த மானிடப்பிறவியாலும் தடுக்கவே தவிர்க்கவே இயலாது. இது தற்போதைய நிலை.
எனக்கு ஒரு சோதிடம் பார்க்கும் இளைஞனுடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு ஏற்ப்பட்டது. அந்த இளைஞன் கூறியது என்னவென்றால் 'கையை நீட்டினால் ரேகையை பார்த்து' அடுத்து நடக்கப்போவதை கூறிவிடுவேன்' என்பது தான்.
அது பகல் பொழுது. அப்போது தான் பாதி வேலையை முடித்துவிட்டு பசியுடன் இருந்த நேரம். சாப்பாட்டிற்க்கு அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் அவன் விடவில்லை. அந்த சோதிடனைப்பார்த்து நான் சொன்னது.
'என் கைரேகையை பார்த்து பிறகு நடக்கப்போவதை சொல்லவேண்டாம். உன்னுடைய கைரேகையை பார்த்து இன்று மதியம் என்ன உணவு சாப்பிடப்போகிறாய்' என்று மட்டும் சொல். நானே கைக்காசில் பகல் உணவு வாங்கித்தருகிறேன் என்றேன்.
திட்டம் என்னவென்றால் அவன் சொல்வதற்கு மாறாக அதைவிட சுவையானதும், விலை அதிகமானதையும் அவனுக்கு சாப்பிட வாங்கித் தருவதுதான். ஒருவிதமாக எங்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட அவன் சொன்னது.
' எனக்கு நானே சோதிடம் பார்க்க இயலாது, மற்றவர்களுக்கு தான் பார்க்க இயலும் என்றான்' நான் விடவில்லை. அப்ப என் கூட வா. பக்கத்து தெருவில் ஒரு சோதிடன் உள்ளான். 'அவனிடம் உனக்கு பார்ப்போம். அவனுக்கு நீ பார் இதில் யாருடையது உண்மை என நாங்கள் பார்க்கிறோம்' என்றேன். அவ்வளவு தான் எடுத்தான் ஓட்டம் !!!. அதற்கு பிறகு அந்த தெரு பக்கமே அவன் வருவதில்லை.
சிலர் இதையும் குறை கூறுவார்கள். நான் பார்த்தது தெரு சுற்றும் சோதிடனை. ஆகவே முழுமையான சோதிடரிடம் சென்றால் தான் சரியாக கணிக்க இயலும் என்பதை. அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் (or) சவால் -
நாங்கள் ஆழிப்பேரலையை(சுனாமி) கணித்து அதிலிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் முயற்சியில் கடந்த நான்கரை வருடங்களாக ஈடுபட்டு வருகிறோம். அதன் இணையதளம்.
நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த பூமியில் அடுத்த சுனாமி எப்பொழுது, எங்கே ஏற்படும் என்பதை சோதிடத்தால் முன்கூட்டியே கணித்து சொல்ல இயலுமா? அதற்கு என்ன தகவல்களை இந்த சோதிடர்கள் எதிர்பார்க்கின்றனர்? அந்த தகவலை நாங்கள் தரத்தயார்.
மேலும் எனது கையிலிருந்து உடனடியாக 1000(ஆயிரம்) ரூபாய் பரிசாக தரத் தயார். இன்னும் இந்த சவாலை ஒரு பத்திரத்தில் முன்கூட்டியே சாட்சிகளுடன் ஒரு ஒப்பந்தமாக எழுதி அதில் இந்த சுனாமியிலிருந்து உயிர்களை காப்பாற்றினால் எனக்கு வரக்கூடிய புகழ், பொருள், பதவி அனைத்தையும் அந்த சோதிடருக்கே உரியது என்று எழுதி தருகிறேன். உயிர்களை விட இவைகள் பெரிதல்ல ! சவாலை ஏற்க யாரும் தயாரா ? தயாராக இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும். எதிர்பார்த்து காத்திருக்கும் ,,,,,
with care & love,
Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com
+91.94420.93300
அப்டேட் :
4:56:00 AM | வகைப்படுத்தல்: சவால், சுனாமி முன்னெச்சரிக்கை | 15 Comments