Related Posts with Thumbnails
சுனாமி முன்னெச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனாமி முன்னெச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சோதிடர்களுக்கு ஒரு வேண்டுகோள் (or) சவால்!!!

அருணின்(வால்பையன்) இடுகையில் பின்னூட்டமாக தான் ஆரம்பித்தேன். அங்கே 'Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters' என கூறிவிட்டதால் தனி இடுகையாகிவிட்டது. வேறென்றுமில்லை ;-)

அந்த இடுகை - "எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!..."


உண்மையில் சோதிடம் என்பது ஒரு கட்டுக்கதை தான். ஆனால் நட்சத்திரம் அல்லது கிரகங்களால் இயக்கங்களால் மனிதன் மட்டுமில்லை. அனைத்தின் வாழ்விலும் மாற்றம் உண்டு பண்ண இயலும் என்பது உண்மை. அப்படி நிகழ்ந்தால் அதை எவராலும் கட்டுப்படுத்த இயலாது என்பது அனைத்தையும் விட மிகப்பெரிய உண்மை.



விளக்கமாக சொல்வதனால் சூரியன் ஒரு நட்சத்திரம் தான். அதன் ஒளியைக்கொண்டே தாவரங்கள் தன்னிடமுள்ள பச்சையத்தின் உதவியால் உணவு தயாரிக்கிறது. திடிரென சூரியனின் ஒளி மங்கிவிட்டாலோ, அல்லது ஒளி அதிகரித்து பொசுக்க ஆரம்பித்தாலோ எல்லோரும் காலி தான். சூரியன் ஒன்றும் இலவசமாக ஆற்றலை உருவாக்கவில்லை. அதன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இழந்து (பிணைத்து) ஒரு ஹீலியமாக மாற்றி அந்த பிணைப்பின் போது கிடைக்கும் சக்தியையே நாம் பெறுகிறோம். ஆக இலவசம் என்று ஒன்றுமில்லை.


அது போல குரு எனப்படுகிற வியாழன் கிரகமானது சூரியக்குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்த அளவிலானது. ஆனால் முழுவதும் வாயுவிலானது. கிட்டதட்ட பெரிய சைஸ் பஞ்சு மாதிரி. இதன் அபார ஈர்ப்பு சக்தியால் தான் நம்ம சூரிய மண்டலமே ஒரு வடிவமாக உள்ளது. இந்த செயலால் பல முறை பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் தப்பி பிழைத்துள்ளன.


எப்படியென்றால் சூரியனின் ஈர்ப்பு விசையினால் சூரியனை நோக்கி விண்வெளியில் உள்ள விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை வரும்போது அதை இந்த வியாழன் தனது அபார ஈர்ப்பு சக்தியால் ஈர்த்து தன் மீது மோத விட்டு அதை அழித்துவிடுகிறது. கிட்டத்தட்ட கோல்போஸ்ட்டில் நிற்கும் கோல்கீப்பர் போல. இந்த வேலையை அது July 16, 1994 to July 22, 1994 அன்று சமர்த்தாக ஷூ மேக்கர் லெவி 9 ஐ தன் மீது மோதவிட்டு அழித்தது.

ஷூ மேக்கர் லெவி9 பற்றிய விக்கிபீடியா கட்டுரை -
http://en.wikipedia.org/wiki/Comet_Shoemaker-Levy_9


இந்த கோல்கீப்பர் நம்ம டைனோக்கள் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் சரியாக கவனிக்காமல் இருந்ததால் ஒரு கல் 'பால்; உள்ளே புகுந்து 'கோல்' ஆகி பூமியில் இருந்த பெரும்பாலான உயிரினங்கள் 'பாழ்' ஆகிவிட்டது. இது மறுபடியும் எப்பவேண்டுமானலும் நடக்கலாம். இதை இந்த சிறிய மண்ணுருண்டையான பூமியில் வசிக்கும் எந்த மானிடப்பிறவியாலும் தடுக்கவே தவிர்க்கவே இயலாது. இது தற்போதைய நிலை.



எனக்கு ஒரு சோதிடம் பார்க்கும் இளைஞனுடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு ஏற்ப்பட்டது. அந்த இளைஞன் கூறியது என்னவென்றால் 'கையை நீட்டினால் ரேகையை பார்த்து' அடுத்து நடக்கப்போவதை கூறிவிடுவேன்' என்பது தான்.


அது பகல் பொழுது. அப்போது தான் பாதி வேலையை முடித்துவிட்டு பசியுடன் இருந்த நேரம். சாப்பாட்டிற்க்கு அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் அவன் விடவில்லை. அந்த சோதிடனைப்பார்த்து நான் சொன்னது.


'என் கைரேகையை பார்த்து பிறகு நடக்கப்போவதை சொல்லவேண்டாம். உன்னுடைய கைரேகையை பார்த்து இன்று மதியம் என்ன உணவு சாப்பிடப்போகிறாய்' என்று மட்டும் சொல். நானே கைக்காசில் பகல் உணவு வாங்கித்தருகிறேன் என்றேன்.


திட்டம் என்னவென்றால் அவன் சொல்வதற்கு மாறாக அதைவிட சுவையானதும், விலை அதிகமானதையும் அவனுக்கு சாப்பிட வாங்கித் தருவதுதான். ஒருவிதமாக எங்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட அவன் சொன்னது.


' எனக்கு நானே சோதிடம் பார்க்க இயலாது, மற்றவர்களுக்கு தான் பார்க்க இயலும் என்றான்' நான் விடவில்லை. அப்ப என் கூட வா. பக்கத்து தெருவில் ஒரு சோதிடன் உள்ளான். 'அவனிடம் உனக்கு பார்ப்போம். அவனுக்கு நீ பார் இதில் யாருடையது உண்மை என நாங்கள் பார்க்கிறோம்' என்றேன். அவ்வளவு தான் எடுத்தான் ஓட்டம் !!!. அதற்கு பிறகு அந்த தெரு பக்கமே அவன் வருவதில்லை.


சிலர் இதையும் குறை கூறுவார்கள். நான் பார்த்தது தெரு சுற்றும் சோதிடனை. ஆகவே முழுமையான சோதிடரிடம் சென்றால் தான் சரியாக கணிக்க இயலும் என்பதை. அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் (or) சவால் -


நாங்கள் ஆழிப்பேரலையை(சுனாமி) கணித்து அதிலிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் முயற்சியில் கடந்த நான்கரை வருடங்களாக ஈடுபட்டு வருகிறோம். அதன் இணையதளம்.



நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த பூமியில் அடுத்த சுனாமி எப்பொழுது, எங்கே ஏற்படும் என்பதை சோதிடத்தால் முன்கூட்டியே கணித்து சொல்ல இயலுமா? அதற்கு என்ன தகவல்களை இந்த சோதிடர்கள் எதிர்பார்க்கின்றனர்? அந்த தகவலை நாங்கள் தரத்தயார்.


மேலும் எனது கையிலிருந்து உடனடியாக 1000(ஆயிரம்) ரூபாய் பரிசாக தரத் தயார். இன்னும் இந்த சவாலை ஒரு பத்திரத்தில் முன்கூட்டியே சாட்சிகளுடன் ஒரு ஒப்பந்தமாக எழுதி அதில் இந்த சுனாமியிலிருந்து உயிர்களை காப்பாற்றினால் எனக்கு வரக்கூடிய புகழ், பொருள், பதவி அனைத்தையும் அந்த சோதிடருக்கே உரியது என்று எழுதி தருகிறேன். உயிர்களை விட இவைகள் பெரிதல்ல ! சவாலை ஏற்க யாரும் தயாரா ? தயாராக இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும். எதிர்பார்த்து காத்திருக்கும் ,,,,,


with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com
+91.94420.93300


அப்டேட் :

சுனாமி ?

October 13, 2008

மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு

மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன.கடலுக்கடியில்
பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.


1. http://thesamnet.co.uk/?p=3637 - மீன்களின் நடத்தையை ஆய்வு செய்வது அவசியம்!


2. http://www.paristamil.com/tamilnews/?p=15315

3. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/

4. http://www.ajeevan.ch/content/view/6565/11/

------------------------------------------------------------------------------

30 Oct 2008
03:33 PM IST

மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே
உணர முடியும்.ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.



இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம். http://en.wikipedia.org/wiki/Indian_Plate



என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய +919842496391 அல்லது +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யின் (http://www.iibc.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த "உயிர்" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?



உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன "இறைவன் நாடினால்" ? இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய ?



சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்ததோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரே விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.



இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.



இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்திற்க்காக
(Indian Techies Zone)

முஹம்மது இஸ்மாயீல். ஹ,
Muhammad Ismail .H, PHD,
+919442093300

வருகை புரிந்த பொறுமையாளர்களின் வார்த்தைகள்