Related Posts with Thumbnails

சோதிடர்களுக்கு ஒரு வேண்டுகோள் (or) சவால்!!!

அருணின்(வால்பையன்) இடுகையில் பின்னூட்டமாக தான் ஆரம்பித்தேன். அங்கே 'Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters' என கூறிவிட்டதால் தனி இடுகையாகிவிட்டது. வேறென்றுமில்லை ;-)

அந்த இடுகை - "எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!..."


உண்மையில் சோதிடம் என்பது ஒரு கட்டுக்கதை தான். ஆனால் நட்சத்திரம் அல்லது கிரகங்களால் இயக்கங்களால் மனிதன் மட்டுமில்லை. அனைத்தின் வாழ்விலும் மாற்றம் உண்டு பண்ண இயலும் என்பது உண்மை. அப்படி நிகழ்ந்தால் அதை எவராலும் கட்டுப்படுத்த இயலாது என்பது அனைத்தையும் விட மிகப்பெரிய உண்மை.



விளக்கமாக சொல்வதனால் சூரியன் ஒரு நட்சத்திரம் தான். அதன் ஒளியைக்கொண்டே தாவரங்கள் தன்னிடமுள்ள பச்சையத்தின் உதவியால் உணவு தயாரிக்கிறது. திடிரென சூரியனின் ஒளி மங்கிவிட்டாலோ, அல்லது ஒளி அதிகரித்து பொசுக்க ஆரம்பித்தாலோ எல்லோரும் காலி தான். சூரியன் ஒன்றும் இலவசமாக ஆற்றலை உருவாக்கவில்லை. அதன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இழந்து (பிணைத்து) ஒரு ஹீலியமாக மாற்றி அந்த பிணைப்பின் போது கிடைக்கும் சக்தியையே நாம் பெறுகிறோம். ஆக இலவசம் என்று ஒன்றுமில்லை.


அது போல குரு எனப்படுகிற வியாழன் கிரகமானது சூரியக்குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்த அளவிலானது. ஆனால் முழுவதும் வாயுவிலானது. கிட்டதட்ட பெரிய சைஸ் பஞ்சு மாதிரி. இதன் அபார ஈர்ப்பு சக்தியால் தான் நம்ம சூரிய மண்டலமே ஒரு வடிவமாக உள்ளது. இந்த செயலால் பல முறை பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் தப்பி பிழைத்துள்ளன.


எப்படியென்றால் சூரியனின் ஈர்ப்பு விசையினால் சூரியனை நோக்கி விண்வெளியில் உள்ள விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை வரும்போது அதை இந்த வியாழன் தனது அபார ஈர்ப்பு சக்தியால் ஈர்த்து தன் மீது மோத விட்டு அதை அழித்துவிடுகிறது. கிட்டத்தட்ட கோல்போஸ்ட்டில் நிற்கும் கோல்கீப்பர் போல. இந்த வேலையை அது July 16, 1994 to July 22, 1994 அன்று சமர்த்தாக ஷூ மேக்கர் லெவி 9 ஐ தன் மீது மோதவிட்டு அழித்தது.

ஷூ மேக்கர் லெவி9 பற்றிய விக்கிபீடியா கட்டுரை -
http://en.wikipedia.org/wiki/Comet_Shoemaker-Levy_9


இந்த கோல்கீப்பர் நம்ம டைனோக்கள் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் சரியாக கவனிக்காமல் இருந்ததால் ஒரு கல் 'பால்; உள்ளே புகுந்து 'கோல்' ஆகி பூமியில் இருந்த பெரும்பாலான உயிரினங்கள் 'பாழ்' ஆகிவிட்டது. இது மறுபடியும் எப்பவேண்டுமானலும் நடக்கலாம். இதை இந்த சிறிய மண்ணுருண்டையான பூமியில் வசிக்கும் எந்த மானிடப்பிறவியாலும் தடுக்கவே தவிர்க்கவே இயலாது. இது தற்போதைய நிலை.



எனக்கு ஒரு சோதிடம் பார்க்கும் இளைஞனுடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு ஏற்ப்பட்டது. அந்த இளைஞன் கூறியது என்னவென்றால் 'கையை நீட்டினால் ரேகையை பார்த்து' அடுத்து நடக்கப்போவதை கூறிவிடுவேன்' என்பது தான்.


அது பகல் பொழுது. அப்போது தான் பாதி வேலையை முடித்துவிட்டு பசியுடன் இருந்த நேரம். சாப்பாட்டிற்க்கு அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்று சொல்லியும் அவன் விடவில்லை. அந்த சோதிடனைப்பார்த்து நான் சொன்னது.


'என் கைரேகையை பார்த்து பிறகு நடக்கப்போவதை சொல்லவேண்டாம். உன்னுடைய கைரேகையை பார்த்து இன்று மதியம் என்ன உணவு சாப்பிடப்போகிறாய்' என்று மட்டும் சொல். நானே கைக்காசில் பகல் உணவு வாங்கித்தருகிறேன் என்றேன்.


திட்டம் என்னவென்றால் அவன் சொல்வதற்கு மாறாக அதைவிட சுவையானதும், விலை அதிகமானதையும் அவனுக்கு சாப்பிட வாங்கித் தருவதுதான். ஒருவிதமாக எங்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட அவன் சொன்னது.


' எனக்கு நானே சோதிடம் பார்க்க இயலாது, மற்றவர்களுக்கு தான் பார்க்க இயலும் என்றான்' நான் விடவில்லை. அப்ப என் கூட வா. பக்கத்து தெருவில் ஒரு சோதிடன் உள்ளான். 'அவனிடம் உனக்கு பார்ப்போம். அவனுக்கு நீ பார் இதில் யாருடையது உண்மை என நாங்கள் பார்க்கிறோம்' என்றேன். அவ்வளவு தான் எடுத்தான் ஓட்டம் !!!. அதற்கு பிறகு அந்த தெரு பக்கமே அவன் வருவதில்லை.


சிலர் இதையும் குறை கூறுவார்கள். நான் பார்த்தது தெரு சுற்றும் சோதிடனை. ஆகவே முழுமையான சோதிடரிடம் சென்றால் தான் சரியாக கணிக்க இயலும் என்பதை. அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் (or) சவால் -


நாங்கள் ஆழிப்பேரலையை(சுனாமி) கணித்து அதிலிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் முயற்சியில் கடந்த நான்கரை வருடங்களாக ஈடுபட்டு வருகிறோம். அதன் இணையதளம்.



நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த பூமியில் அடுத்த சுனாமி எப்பொழுது, எங்கே ஏற்படும் என்பதை சோதிடத்தால் முன்கூட்டியே கணித்து சொல்ல இயலுமா? அதற்கு என்ன தகவல்களை இந்த சோதிடர்கள் எதிர்பார்க்கின்றனர்? அந்த தகவலை நாங்கள் தரத்தயார்.


மேலும் எனது கையிலிருந்து உடனடியாக 1000(ஆயிரம்) ரூபாய் பரிசாக தரத் தயார். இன்னும் இந்த சவாலை ஒரு பத்திரத்தில் முன்கூட்டியே சாட்சிகளுடன் ஒரு ஒப்பந்தமாக எழுதி அதில் இந்த சுனாமியிலிருந்து உயிர்களை காப்பாற்றினால் எனக்கு வரக்கூடிய புகழ், பொருள், பதவி அனைத்தையும் அந்த சோதிடருக்கே உரியது என்று எழுதி தருகிறேன். உயிர்களை விட இவைகள் பெரிதல்ல ! சவாலை ஏற்க யாரும் தயாரா ? தயாராக இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும். எதிர்பார்த்து காத்திருக்கும் ,,,,,


with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com
+91.94420.93300


அப்டேட் :

 

15 பின்னூட்டங்கள்:

வால்பையன் சொன்னது…

டியர் இஸ்மாயில்!

உங்களுடய பதிவு முழுக்க முழுக்க எனக்கு ஆதரவாகவே இருக்கிறது, நான் குறிப்பிட்ட விசயங்களை தான் நீங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள்!

நன்றி!

வால்பையன் சொன்னது…

//சூரியன் ஒரு நட்சத்திரம் தான். அதன் ஒளியைக்கொண்டே தாவரங்கள் தன்னிடமுள்ள பச்சையத்தின் உதவியால் உணவு தயாரிக்கிறது.//


என்னுடய முந்தய பதிவான கோள்களும், சந்திரனும் என்ற பதிவில் நான் குறிப்பிடிருந்தது!

சூரிய குடும்பத்தில் பூமியை விட பெரிய துணைகோள்கள் சுற்றி வருகின்றன, ஆனால் பாருங்கள் தம்மாத்துண்டு புதன் கிரகம் நம் மீது செலுத்தும் கதிரியக்கத்தை அவைகள் நம் மீது செலுத்தாது!, ஆனால் உண்மையில் சூரியனை தவிர வேறு எந்த கோள்களும் கதிரியகத்தை ஏற்படுத்த முடியாது!.

சூரியனை தவிர வேறெந்த கோள்களாலும் கதிரியக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பது உண்மை தானே

வால்பையன் சொன்னது…

//குரு எனப்படுகிற வியாழன் கிரகமானது சூரியக்குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்த அளவிலானது. ஆனால் முழுவதும் வாயுவிலானது. கிட்டதட்ட பெரிய சைஸ் பஞ்சு மாதிரி. இதன் அபார ஈர்ப்பு சக்தியால் தான் நம்ம சூரிய மண்டலமே ஒரு வடிவமாக உள்ளது.//

சூரிய குடும்பத்தின் வடிவத்திற்கும், வியாழனுக்கும் சம்பந்தமில்லை,

எனது கோள்களும்மோதல்களும் என்ற பதில்வில் வியழன் கிரகம் பற்றி சொல்லியிருந்தது!

வியாழன் தான் சூரிய குடும்பத்தில் பெரிய கோள் என்பதால் அது பல சிறு கோள்களை இழுத்து சூரிய குடும்பத்தில் பல துணைகோள் கொண்ட பெரிய கிரகமாக சுற்றி வருகிறது.

1994 ஆம் வருடம் சூமேக்கர் என்பவரும் லெவி என்பரும் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தை வானில் கண்டனர், அதற்கு முன் அந்த வால் நட்சத்திரத்தை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, அதனுடய சுற்று பாதை ஆச்சர்யபடும் வகையில் வியாழன் கிரகத்துக்கு அருகில் இருந்தது, அந்த வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு 21 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகம் நோக்கி ஒரு ரயில் வண்டி பெட்டியை போல் அசுர வேகத்தில் சென்றது, வியாழன் கிரகத்தின் காற்று மண்டலத்தை அடைந்த போது அவற்றில் தீ பற்றி வரிசையாக ஒரு தோரணம் போல் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.


cont........

வால்பையன் சொன்னது…

cont..........

சூமேக்கர் லெவி வால்நட்சட்சத்திரத்தை பற்றி முன்நாட்களில் எந்த வித அகுறிப்பும் இல்லை என்பது மிக முக்கிய விசயம், தொடர்ந்து சுற்றி கொண்டிருக்கும் ஒரு வாழ்நட்சத்திஅர்ம் பாதை மாறி மோதுவது வேறு புதிதாக ஒரு வால்நட்சத்திரம் தோன்றி வந்து மோதுவது வேறு விசயம்!

லெவி அனேகமாக வேறு ஒரு சூரிய குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்திருக்கலாம், அல்லது பல்லாயிரம் வருடங்கள் சுற்றுபாதை கொண்ட நீண்ட பாதையுடய வால் நட்சத்திரமாக இருக்கலாம்!

இவ்வளவு ஆணிதரமாக நான் கூற காரணமும் இருக்கிறது, தற்போதய சந்திரனில் நம்மால் விண்கற்களின் மோதலை வெறும் கண்ணால் பார்க்க முடிகிறது, அதே மாதிரியான பள்ளங்கள் பூமியிலும் உண்டு, ஆனால் காற்று,நீர் அரிப்பால் அவை மறைந்து விட்டன, ஒருகாலத்தில் தொடர்ச்சியான தாக்குதலுகுண்டான கோள்கள் தற்போது ஏன் தக்குதலுக்கு உள்ளாவதில்லை!

அதே பதிவில் நான் சொன்னது போல் செவ்வாய் கிரகத்தில் மீது ஏற்பட்ட மோதலே அஸ்ட்ராய்டு பெல்டுக்கு காரணம், அது ஒரு சுற்றுபாதையை அடையும் முன்னர் பல திசைகளிலும் பரவி கிடந்தது! அருகில் இருந்த கொள்களீன் ஈர்ப்புகேற்ப சிறுகற்கள் தாக்க தொடங்கின.

அஸ்ட்ராய்டு பெல்டு நிரந்தரமாக ஒரு சுற்று பாதையை அடைந்தவுடன் அவைகளின் தாக்கம் குறைந்து விட்டது அல்லது அடியொடு நின்றுவிட்டது,

சூமேக்கர் லெவியின் தாக்குதல் லட்சத்திற்கு ஒன்று என்ற சாத்தியகூறு மட்டுமே உள்ளது, அதனை கருத்தில் கொண்டு வியாழன் கிரகம் தான் சூரிய குடும்ப வடிவத்துக்கு ஆதாரம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை!

வால்பையன் சொன்னது…

கடைசியாக நான் எழுதியிருந்த எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு என்ற பதவி முழுக்க முழுக்க மன உளவியல் சார்ந்தது, சோதொடத்துக்கு எதிராக அறிவியலை வைக்க வேண்டாம் என ஒரு நண்பர் பின்னூட்டத்தில் கேட்டு கொண்டதால் அதை உளவியலுக்கு திருப்பினேன்!

எப்படி பார்த்தாலும் ஜோதிடம் என்பது டுபாக்கூர் என்பது தான் ரிசல்ட்!

சுனாமி வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள டெக்கான் ப்ளேட்டுகளின் நகர்வை கவனிக்க வேண்டும், கோள்களின் அசைவால் சுனாமி ஏற்படாது!

கண்ணா.. சொன்னது…

நல்ல இடுகை..

//நாங்கள் ஆழிப்பேரலையை(சுனாமி) கணித்து அதிலிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் முயற்சியில் கடந்த நான்கரை வருடங்களாக ஈடுபட்டு வருகிறோம்//

இயற்கையை நாம் சீண்டினால்தான் அது நம்மை சீண்டும்.

கடற்கரையோரத்தில் 1 km இடம் விட்டாலே சுனாமி குறித்த எந்த கவலையும் வேண்டாம் என எங்கள் கல்லூரி பேராசிரியர் சொன்னார்

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ அன்பின் கண்ணா,

// இயற்கையை நாம் சீண்டினால்தான் அது நம்மை சீண்டும்.//

உண்மைதான். இயற்கையானது சீண்டப்பட்டால் தான் அது மனிதனை தீண்டும். ஆனால் 'தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறி கட்டியது போல' 2004 ல் எங்கேயே இருந்த சுமத்ராவில் ஏற்ப்பட்ட பெரும் கடலடி பூகம்பம் சோமாலியா வரை உயிர் சேதத்தை ஏற்ப்படுத்தியது. காரணம் நாம் கடலால் சூழப்பட்டு உள்ளோம். ஆகையால் கடலில் எங்கு பெரும் பூகம்பம் ஏற்பட்டாலும் அதை ஆராய வேண்டிய நிலை தான் எங்களுடையது.


// கடற்கரையோரத்தில் 1 km இடம் விட்டாலே சுனாமி குறித்த எந்த கவலையும் வேண்டாம் என எங்கள் கல்லூரி பேராசிரியர் சொன்னார்//


100% சரியான கருத்து. சுனாமியினால் அதிகபட்சமாக கடற்கரையின் இருபுறமும் சுமார் 2 கி.மீ தூரம் தான் பாதிப்பு ஏற்படுத்த இயலும். அதாவது கடற்கரையிலிருந்து கடலினுள் மற்றும் கடற்கரையிலிருந்து தரைப்பகுதியில். ஆனால் கண்ணா இந்த அப்பாவி மீனவர்கள் இன்னும் கடலுக்கு மிக அருகிலேயே தங்களுடைய குடியிருப்பை அமைத்துக்கொண்டுள்ளனார். காரணம் அப்போது தான் அவர்களால் எளிதாக கடலில் பயணித்து மீன் பிடிக்க இயலும். அவர்களை அப்புறப்படுத்துவதென்பது மிக சிரமமான காரியம். இங்கே நாகையில் சுனாமிக்கு பிறகு மீனவர்களின் புதிய குடியிருப்பானது 1 கி.மீ தள்ளி தான் அமைக்கப்பட்டது.


ஆனால் அவர்களின் மீன்பிடி படகுகள், மற்ற உபகரணங்கள் அனைத்தையும் கடற்கரையில் தான் விட்டு வருகின்றனர். இனி ஒரு சுனாமி ஏற்ப்பட்டால் 2004 போல் உயிர் சேதம் அதிகமிருக்காவிட்டாலும், பொருட்சேதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்களுடை திட்டம் என்னவென்றால் சுனாமி வரப்போவதை முன்கூட்டியே அறிந்து அது பற்றிய தகவல்களை மீனவரிடத்திலே செல்லிட பேசியின் குறுந்தகவல்கள் வழியாக கொண்டு சேர்ப்பது தான். கீழே உள்ள முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட குறுந்தகவல் அதை மையமாக கொண்டது தான். அதில் சுனாமி முதல் அலை வரப்போகும் நேரத்தை கணித்து அனைவருக்கும் குறுந்தகவல் அனுப்புவது தான் எனது பணி. இந்த தகவல் சரியாக கிடைத்தால் அவர்கள் தங்களின் படகுகளை இயக்கி கடலினுள் சுமார் 1 to 2 கி.மீ சென்றுவிட்டால் அவர்களது உயிர், உடைமையனைத்தையும் காப்பற்றி விடலாம்.


சுனாமியின் போது படகுகளுக்கு பாதுகாப்பான இடம் கடலில் 1 to 2 கி.மி தூரம் அல்லது கரையிலிருந்து 1 to 2 கி.மீ தூரம். ஆனால் கரைக்கு அதை குறுகிய காலத்தில் 1 கி.மீ தூரம் கொண்டு வருவது சாத்தியமற்றது. ஆனால் சரியான முறையில், மனோதிடம் ஊட்டப்பட்ட மீனவர்களால் படகினை கடலுக்குள் கொண்டு செல்ல இயலும். இதைப்பற்றி மீனவ மக்களிடையே ஒரு விழிப்புணர்வு உண்டாக்கி வைத்துள்ளோம். ஆனால் சிலருக்கு பயம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. இந்த முயற்சி வெற்றி பெறுமா, பெறாதா என்பது ஆன்மீகவாதிகளின் பார்வையின் படி "இறைவனின் நாட்டம்", விஞ்ஞானவாதிகளின் பார்வையில் "நிகழ்தகவு". எங்களின் மனிதாபிமான பார்வையில் காப்பற்றிவிட இயலும் என்ற 'நம்பிக்கை'. அவ்வளவு தான். தவிர தீமையிலும் ஒரு நன்மை என்பது போல இந்தியாவிற்கு மிக அருகில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தூரப்பகுதிகளில் ஏற்படுவதால் தான் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதிக பட்சமாக நமக்கு 2 மணி நேரம் இருப்பதே ஆறுதலான விஷயம்.


For Fisherman ========
Safety for Boaters: Please start your boats from the port to sea. Tsunami waves only affect below 2 KM in two sides of seashore. The 1st wave time is 99:18 AM


குறிப்பு - இது பற்றி இன்னும் விளக்கம் வேண்டுமானலும் கேட்கலாம். இயன்ற வரை விளக்கமாக பதில் தர முயற்சிக்கின்றேன்.

கண்ணா.. சொன்னது…

//எங்களுடை திட்டம் என்னவென்றால் சுனாமி வரப்போவதை முன்கூட்டியே அறிந்து அது பற்றிய தகவல்களை மீனவரிடத்திலே செல்லிட பேசியின் குறுந்தகவல்கள் வழியாக கொண்டு சேர்ப்பது தான். கீழே உள்ள முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட குறுந்தகவல் அதை மையமாக கொண்டது தான். அதில் சுனாமி முதல் அலை வரப்போகும் நேரத்தை கணித்து அனைவருக்கும் குறுந்தகவல் அனுப்புவது தான் எனது பணி. இந்த தகவல் சரியாக கிடைத்தால் அவர்கள் தங்களின் படகுகளை இயக்கி கடலினுள் சுமார் 1 to 2 கி.மீ சென்றுவிட்டால் அவர்களது உயிர், உடைமையனைத்தையும் காப்பற்றி விடலாம்.//

மிக மரியாதைக்குரியது உங்கள் பணி..



//இது பற்றி இன்னும் விளக்கம் வேண்டுமானலும் கேட்கலாம். இயன்ற வரை விளக்கமாக பதில் தர முயற்சிக்கின்றேன்.//

கண்டிப்பாக உங்களிடம் பல விஷயங்கள் கேட்டு தெளிவு பெறுவேன்.

தற்போது அது குறித்து நிறைய விஷயங்கள் தெரியாததால்.. கேள்விகள் இல்லை

நன்றி

மேவி... சொன்னது…

THALA..... nalla eluthi irukkinga,,,

innum detail la eluthi irukkalam

chat la vanga...pesuvom

viswanaath@gmail.com

K.Thennarasu சொன்னது…

அண்மையில் நான் கேள்விப்பட்ட செய்தி 2012 இல் உலகம் அழிய போவதாக . இது பற்றி ஒரு ஆங்கில படம் கூட வெளி வந்துள்ளது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ arasu_mca,

உங்களின் கேள்விக்கு வேடிக்கையாக பதிலுரைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் உண்மையும் இது தான்.

ரோலண்ட் எம்மரிச் எப்போதும் அவரது அழிவுப்படங்கள்(Disaster_films) வழியாகத்தான் அறியப்படுபவர். அவர் எடுத்த வீர,தீரப்படங்கள்(Action films) பலர் அறியாதது. அவருக்கு நம்மை பயமுறுத்தி பணம் பார்ப்பதில் அபார விருப்பம்.

பிறகு அந்த படத்தில் வருவது போல 2012 டிசம்பர் 21ம் தேதி இந்த பூமி ஒன்றும் அழியாது. இதற்கு முன் பூமியானது பல சிக்கல்களை சமாளித்து தான் இந்த நிலையில் உள்ளது. நம்மைவிட அளவில் பெரிய டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்தும் இந்த பூமி அழியவில்லை. இந்த இடத்தில் "வலுத்தவைகள் மட்டுமே வாழும், Fittest only Survival" என்ற விதிக்கு ஆப்படிக்கப்பட்டு விட்டது. அந்த ஆப்பை அடித்தது யார் என்று தெரியவில்லை !!!


ஆனால், ஆனால் அதற்கு பிறகு பூமியில் உள்ள சில நானோகிராம் எடையுள்ள ஒரு செல் அமீபாவிலிருந்து, பல டன் எடையுள்ள நீலத்திமிங்கலம் அல்லது அதை விட பெரிதாக இருப்பதற்கான சாத்தியமுள்ள இந்த Bloop (http://en.wikipedia.org/wiki/Bloop) வரை (மனிதனும் இதில் அடக்கம்) பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் 2012ல் விஞ்ஞானிகளால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதில் ஒன்று இந்த பூமியின் காந்தபுல மாற்றம்.

அது என்னவேன்றால் பூமியின் வட துருவமானது தென் துருவமாகிவிடுமாம். அது போல தென்துருவமானது வடதுருவம் ஆகிவிடுமாம். இதனால் நமக்கு என்ன ஆச்சு என்கிறீர்களா? அதை விஞ்ஞானபூர்வமாக இதை அறிய கீழே உள்ள சுட்டிகள் அனைவருக்கும் உதவக்கூடும். கீழே உள்ள என்னுடைய PDF file யும் படித்தால் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியையும், அதன் வரையைறையும் அறிந்து கொள்ளமுடியும். நன்றி.


1. http://jayabarathan.wordpress.com/2009/05/14/katturai-58/
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள். (The Deadly Magnetars)

2. http://jayabarathan.wordpress.com/2009/06/05/katturai-59/
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ? (Earth’s Magnetic Pole Reversal)

http://gnuismail.googlepages.com/regarding-reversalsinoursolarobjects.pdf

மேலே PDF file ல் உள்ள எனது கேள்விகளுக்கு இதுவரை அங்கிருந்து விடை வரவில்லை. அதற்கான காரணமும் எனக்கு இது வரை புரியவில்லை. ஆனால் நான் அனுப்பிய மின்னஞ்சல் போய் சேர்ந்து விட்டது. அது உறுதி. மேலும் சில வானியல் வல்லுனர்களிடம் இது பற்றி உரையாடிய போது அவர்களின் கூற்று என்னவென்றால் வட,தென் துருவ மாற்றம் நிகழ்ந்தாலும் மேற்கு, கிழக்கில் மாற்றம் ஏற்படாது என்பது தான்.ஆனால் இவையெல்லாம் கற்பித கோட்பாடுகளோ.இவற்றை நிருபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லை. காரணம் முன்னர் பூமியில் இது போன்ற துருவ மாற்றம் நிகழ்ந்த போது மனித இனம் எப்படி இருந்தது என்பதை யாரும் அறிய இயலவில்லை.

இறுதியாக இப்பூமியில் பலமுறை பழைய உயிரினங்கள் Format செய்யப்பட்டு, புதிய உயிரினங்கள் Re-Install செய்யப்பட்டு விட்டது. இறுதியாக பெரிய விண்கல் ஒன்று மோதி இங்கு வாழ்ந்த டைனோஸர்களுக்கு முடிவு கட்டி விட்டது. அவையனைத்தும் அழிந்து தற்போது எலும்பு படிவங்களாக மிஞ்சி நிற்கிறது. யார் கண்டார் ? நாமும் இது போன்ற எலும்பு படிவங்களாக மாற்றப்பட்டு, நமக்கு பின் பூமியில் வசிக்க வந்த உயிரினங்கள் அதை ஆராய்ச்சி பண்ணினாலும் பண்ணலாம் ;-).

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

// டியர் இஸ்மாயில்!

உங்களுடய பதிவு முழுக்க முழுக்க எனக்கு ஆதரவாகவே இருக்கிறது, நான் குறிப்பிட்ட விசயங்களை தான் நீங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள்!

நன்றி! //


@ அன்பின் அருண்,

உண்மைதான். நானும் இதில் பட்டு பின்பு இதனால் ஒன்றும் செய்ய இயலாது என அறிந்ததால் தான் இந்த இடுகை. புரிதலுக்கு நன்றி. உங்களின் இந்த தொடர் பின்னூட்டத்திற்கு விரைவில் தனியே ஒரு இடுகையிட்டால் தான் சரிப்படும். ;-)

மேலும் வான்வெளி பல மர்மங்கள் நிறைந்தது. சிலவற்றிற்க்கு இன்னமும் தெளிவான ஆதாரங்களே, விளக்கமோ கிடையாது. அதில் ஒன்று இந்த கருப்பு விஷயம்(Dark Matter) மற்றும் கருப்பு சக்தி(Dark Energy). பார்ப்போம் இறை நாடினால் எழுதுகிறேன். :-))))

பித்தனின் வாக்கு சொன்னது…

// இயற்கையை நாம் சீண்டினால்தான் அது நம்மை சீண்டும்.//

// கடற்கரையோரத்தில் 1 km இடம் விட்டாலே சுனாமி குறித்த எந்த கவலையும் வேண்டாம் என எங்கள் கல்லூரி பேராசிரியர் சொன்னார்//


இது உண்மைதான், கல்பாக்கத்தில் கடலை ஒட்டி உள்ள நிலத்தில் இருந்த ஊசியிலை மரங்களை எல்லாம் வெட்டி வீடும் சர்ச்சும் கட்டினாங்க. இப்ப சுனாமி வந்தவுடன திரும்பி மரத்த நட்டு தண்ணீ ஊத்தறாங்க. கிழக்கு கடற்கரை சாலையில் போனா இதைப் பார்க்கலாம். நன்றி.

ஒவ்வேறு வருடம் தமிழ் புத்தாண்டு வரும் போது பஞ்சாங்கம் அல்லது ஜோதிடம் பார்க்கவும். இந்த வருடம் பேரழிவுகள், மழை, வெள்ளம், பஞ்சம் பத்தி சொல்லி இருப்பாங்க. விதி கால், மதி முக்கால் என்ற பழமொழியையும் மறக்க வேண்டாம். நன்றி.

ஜோதிஜி சொன்னது…

சுடுதண்ணியில் நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு ரசிகனாக உள்ளே வந்தேன். ஆனால் பின்னூட்ட பயமுறுத்தல் சற்று யோசிக்க வைக்கின்றது.

பிரபாகரன் போல கண்டிப்பு வாத்தியாரோ?

Colvin சொன்னது…

நானும் இவ்வாறே தனிப்பட்ட ரீதியிலும் சோதிடர்களுக்கு சவால் விடுத்துள்ளேன். எனது குணநலன்களை கூறும்படி ஒருவரிடம் கேட்டேன். சாட்சிக்கு இரு நண்பர்கள் இருந்தார்கள். அச் சோதிடன் எவ்வளவு அபத்தமாக உளரினார் என்று என்னும் போது சிரிப்புதான் வருகிறது.

அது மட்டமல்ல தமிழ்வெப்துனியாவில் வரும் சோதிடரும் அப்படியே எனது பல கருத்துரைகளை இது தொடர்பாக அங்கு பதிவு செய்திருந்தேன்.