Related Posts with Thumbnails

மென்கொடை - ver 1.1

அன்பின் சகோதர,சகோதரிகளே,


நல்ல இடுகைகள் + ப்ரிபெய்ட் செல்லிடபேசி எண் = சிறு வருமானம் !!!. முன்னுரையே இந்த இடுகையின் நோக்கத்தை பாதி விளக்கி விடும்.
முதலில் நண்பர் பிகேபியின் இந்த மென்கொடை இடுகையை முழுமையாக அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் சேர்த்து படித்து விட்டு வாருங்கள். நானறிந்து இந்த மென்கொடை என்ற சொல்லை முதன் முதலில் இணையத்தில் உபயோகப்படுத்தியவர் நண்பர் பிகேபி தான். சந்தேகமிருந்தால் இதை க்ளிக்கவும். உங்களுக்கே சட்டென விவரம் புரியும். இங்கேயும் விளக்கம் உள்ளது.







மறுபடியும் உதவிக்காக அந்த இடுகை --- மென்கொடை



நான் இதை எழுத காரணம் சில பதிவர்கள் நன்றாக பதிவிட்டு கொண்டிருந்த நிலையில் சட்டென காணமல் போய் விடுகிறார்கள். அதற்கான காரணம் அவர்களது சரக்கு தீர்ந்து விட்டது என அர்த்தமல்ல. மாறாக கடினப்பட்டு தகவல்களை சேர்த்து அதை அலசி, ஆராய்ந்து அதை படைப்பாக்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பதிவுலகத்திலிருந்து கிடைக்கும் பரிசு சில டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் மட்டுமே. அதிலும் சில வகைகள் மன்னனை பரிசை நாடி சென்று புகழ்ந்து பாடிய ஏழைப்புலவனுக்கு பரிசுக்கு பதிலாக மன்னனும் ஏழைப்புலவனை புகழந்து பாடி கணக்கை நேர் செய்வது போல் தான் உள்ளது. பாவம் அவர்கள்.சில நல்ல இடுகைகளை எழுதிய பதிவர்கள் பிறகு இணையம் பக்கமே வருவதில்லை. காரணம் அவர்கள் பொருளாதார ரீதியாக தேவையுடையவர்கள். நான் பார்த்த வகையில் இன்னும் பலர் சொந்தக் கணணியும், இணைய இணைப்பின்றி இணையதள உலாவு மையத்திலிருந்தே (ப்ரெளசிங் சென்டர்) தங்களின் பதிவுகளை மிகுந்த சிரமத்திற்கிடையில் படைக்கிறார்கள்.அந்த படைப்புகளுக்கு பதிவுலகில் தரப்படும் மாயப்பரிசுகளைக் கொண்டு அவர்களின் வயிற்றுப்பசிக்கு உணவு தயாரிக்க இயலாது. நிறைய பதிவர்கள் செம்மையான சரக்கு உள்ள இடுகைகளை பதிகிறார்கள். மேலும் அவற்றை எழுத கடினமான முன் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார்கள். அதற்காக நிறைய நேரத்தை செலவிட்டு தங்களின் படைப்புகளை உருவாக்குகிறார்கள்.அவற்றை படிக்கும் போது அவர்களுக்கு "ஏதாவது செய்யணும் பாஸ்" என நண்பர் நர்சிம் போல கூவ தோன்றுகிறது. ஆனால் என்ன செய்ய ? எப்படி செய்வது ?


மேலும் யாருக்குமே தனது படைப்புகளை பற்றி மற்றவர்களின் கருத்தும், ஆதரவும் அங்கீகரிப்பும் தேவையான விஷயம். ஆனானப்பட்ட சர்வ வல்லமை உள்ள இறைவனே தான் ஆதமை படைத்தவுடன் மற்ற படைப்புகளை அழைத்து தன்னுடைய புதிய படைப்பை பற்றி சிலாகித்து கூறி தான் படைத்த மனிதனான ஆதமுக்கு மரியாதை செலுத்த சொன்னான். இப்லீஸை தவிர மற்ற அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். ஆனால் அவனே தானே மிக "உயர்ந்தபடைப்பு" = "நற்குடி" என தற்பெருமை பேசி இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக இனவெறியை கடைபிடித்து இறைவனுக்கு நெருக்கமாக இருந்த அந்த இப்லீஸ் கேடுகெட்ட ஷைத்தானாக பதவி இறக்கம் செய்யப்பட்டான். இது குர் ஆனில் குறிப்பிடப்பட்ட நிகழ்வு. இதில் எனது கருத்து என்னவென்றால் இப்லீஸூக்கு வல்ல இறைவனுடன் இருந்த நெருக்கம் காரணமாக ரொம்ப தெனவெட்டாக அங்கே திமிர் பிடித்து, இங்கே உள்ள அரசியல்வாதிகளின் அல்லக்கைகள் போல அட்டூழியம் செய்திருப்பான். இதை உணர்ந்த இறைவனும் இந்த பயலை எப்படி இங்கிருந்து வெளியேற்றுவது என திட்டம் போட்டு ஆதமை படைத்து அவனுக்கு ஆப்பை சொருகி விட்டான். அந்த கடுப்பில் தான் நமக்கும் ஷைத்தானுக்கும் இடையே ஆட்டமும் ஆரம்பமாகிவிட்டது. மனிதர்களை கேடுகெட்ட செயல்களை உள்ளிருந்து தூண்டுபவன் அவன் தான். அசுரர்களுக்கு சிவனால் வழங்கப்பட்ட வரங்கள் போல் அவனுக்கு இறுதிநாள் வரை இதை செய்ய கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. So இந்த ஆட்டம் அதுவரை தொடரத்தான் செய்யும். நம்மால் தவிர்க்க இயலாது. அவனை எதிர்த்து இந்த பூமியாகிய மைதானத்தில் கடைசி மனிதன் இருக்கும் வரை எதிர்த்து ஆடித்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு இதிலிருந்து தெரிய வரும் மீச்சிறு விவரம் என்னவென்றால் ஆனானப்பட்ட, யாரிடத்திலும் எவ்வித தேவைகள் அற்ற இறைவனே ஆனாலும் தனது படைப்பிற்கு மற்றவைகளிடம் இருந்து குறைந்த பட்சம் சில நல்ல பின்னூட்டமாவது எதிர்பார்ப்பான் என்பது தான் :-). அங்கே அனானியாக புண்ணூட்டம் இட இயலாது. அசிங்க புண்ணூட்டம் இட்டால் இப்லீஸூக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். நான் சில இடுகைகளை மிக விரும்பிஅவற்றைவிட பெரிதாக நான் பின்னூட்டம் இட இது தான் காரணம். என்ன ரகசியம் புரிந்ததா ?


கூகுள் கண்டிப்பாக தற்போது தமிழ் பதிவர்களுக்கு ஆட்சென்ஸ் தரப்போவதில்லை. மற்ற தளங்களும் தரும் சல்லிகளும் தேய்ந்து போன
மவுஸ்பேடை மாற்றுவதற்கு கூட உதவாது.இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று நம்மவர்களிடம் இருந்து தமிழில் அதிக வருமானமுள்ள விளம்பரங்கள் கூகுளுக்கு செல்வதில்லை. ஆகவே நம்மை கொண்டு அவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் கூகுளுக்கு வரும்படியில்
நமக்கு பங்கு தருவதில்லை. இது தான் அடிப்டையான காரணம். நண்பர் பிகேபி கூட இந்த மென்கொடை என்ற முறையை அறிமுகப்படுத்தினார். ஆனால் நம்மவர்களிடம் கடனட்டை போன்ற வசதிகள் அனைவரிடமும் கிடையாது. ஆகவே அது அவ்வளவாக பயன் தரவில்லை. அங்கே அதிரை
தங்க செல்வரஜன் பின்னூட்டத்தில் கூறியபடி பாரதியார் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரை பணத்தால் பாதிக்கப்பட்ட படைப்பாளர்கள் ஏராளம்.
நமது கணித மேதை ராமனுஜத்தின் நிலையும் இது தான். காகிதம் வாங்க பணம் இல்லாமல் சிலேட்டிலேயே அனைத்து கணித சூத்திரங்களையும் எழுதி அழித்து பிறகு எழுதி பழகியதால் சில சூத்திரங்கள் நமக்கு கிடைக்கமால் போய் விட்டது. இவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எல்லாம் இவர்களின் மரணத்திற்கு பிறகு தரப்பட்டவை. அவைகள் அனைத்தும் என் உம்மா (தாய்) அடிக்கடி சொல்லும் "சாக போவதற்கு முன் பெறக்கூடிய பிள்ளையும், உணவை உண்டு முடித்தவுடன் சுடப்படும் கருவாடும் பயனற்றவை". என்பதைப்போலத்தான்.



இதனால் தான் கல்வியை சமுதாயத்திற்கு கற்பிக்கும் "தலையாய" பணியை செய்த பிராமண வர்ணத்தினருக்கு அங்குள்ள மக்களே 'பிட்ஷை'
இட்டு அவர்களின் உணவுத்தேவைக்காக வேறு வேலைகளில் ஈடுபட்டு முழுநேர கல்வி பணி பாதிக்காமல் காத்தனர். மேலும் பிராமணர்க்கு கடல் பயணம் தடுக்கப்பட்டதான் காரணம் தற்காலத்தில் நடக்கும் "Brain Drain" ஆகி கல்வியானது மனித குலத்திற்கு எட்டாக்கனி ஆகிவிடாமல் தடுக்கத்தான். வர்ணாஸிரமத்தை பற்றிய என்னுடைய பார்வையானாது எது வென்றால் "இந்த சமுதாயமே முழு உடல் போன்றது". அதில் "தலை"யின் வேலையை மேலே விவரித்து விட்டேன். மற்ற பாகங்களின் வேலைகள் என்னவென்று தற்போது உங்களுக்கே புரிந்திருக்கும். இந்த புரிதலுடன் தான் இங்கே உள்ள பிராமண குடும்பத்தினரிடம் போய் என்னால் இயன்ற அளவு ஏதாவது செய்ய முயற்சிக்கின்றேன். கூடிய விரைவில் அங்கேயே எனது மனைவி,எங்கள் குழந்தையுடன் சென்று நிலையாக குடியமர முயற்சித்து வருகிறேன். உடம்புக்கு முடியாவிட்டால் பசுவின் மீதேறியாவது பள்ளிவாசலுக்கு சென்று இறைவனுடன் உரையாடலாம். அதற்காக பன்றியின் மீது ஏறி செல்ல இயலாது அல்லவா ? ஆதலால் தான் அங்கு செல்வதற்கு முடிந்த அளவு ஹலாலான முறையில் பணம் சேர்க்கிறேன். மேலும் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் பள்ளிவாசல்களில்
மக்களுக்கு முழு கல்வியும் கற்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளிவாசல்கள் பெருமைக்காக உலகின் உயரமான கட்டடங்களில் 158 வது மாடிகளில் கட்டப்படுகிறது. அந்த கட்டடத்தை கட்ட உதவியவர்களே தற்போது அங்கு உள்நுழைய இயலாத போது நான் எப்படி அங்கு நுழைய முடியும்? எங்களுக்கு இந்த அரசவனங்காடு தான் சரி. இறைவனின் நாட்டத்தை பொருத்து கூடிய விரைவில் அங்கு சென்றுவிடுவேன். நன்மையான செயலினால் நானும் ஒரு "தலையாக" மாற ஆசை இருக்கிறது. பிறப்பினால் தான் "தலையாக" முடியும் என்பதெல்லாம் 100% உளரல்கள் தான். இதை சொன்னதற்கு என்னை சிலர் கும்மி தீர்த்துவிட்டனர். நானும் அவர்களுக்கு சளைத்தவனா என ? அவர்களை திருப்பி கும்மி விட்டேன். போகட்டும், அவர்களது பகுத்து அறியும் திறன் அவ்வளவு தான்.


இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் தற்போது தாரம் இல்லாதபோதும் பொருளாதாரம் அடித்த காரணத்தினால் களத்தில் இல்லாத நம்ம அண்ணன் உண்மைத்தமிழனுக்கு போட்டியாக விரும்பாததால் இத்தோடு நிறுத்துகிறேன். அவர் எழுதிய ஒவ்வொரு நீண்ண்ண்ண்ண்ட இடுகைகளுக்கு
கொஞ்சமாவது கூலி கிடைத்திருந்தால் பதிவுலகை கைகழுவி விட்டு விகடனில் போய் வேலைக்கு சேரந்திருக்க மாட்டார். நமக்கும் விவரமான தகவல்கள் அவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். உ. த . அண்ணா . இது தவறான சிந்தனையாக இருந்தால் மன்னித்து விடுங்கள். நானும் மாற்றிவிடுகிறேன்.


நான சொல்லவந்த விஷயம் இது தான். நம்ம பிகேபியின் மென்கொடை ver 1.0 கொஞ்சம் இற்றைப்படுத்தி (அப்டேட்/Update) செய்து அதை மென்கொடை ver 1.1 ஆக மாற்றியுள்ளேன். இன்னும் திறமை உள்ளவர்கள் இதில் மாற்றம் செய்து 1.2, 1.3 என கொண்டுசெல்லலாம்.

இதன் படி இடுகையை படைக்கும் போது ஏற்ப்பட்ட படைப்பாளியின் வியர்வை உலருமுன் கூலி கிடைக்காவிட்டாலும், அதைப்படித்து பயனடைந்த பயனாளி தனது வியர்வை உலருமுன் தெரு முக்கில் உள்ள ஓர் கடையில் போய் கம்பீரமாக அந்த படைப்பாளியின் செல்லிட பேசிக்கு தன்னால் இயன்ற அளவு கொஞ்சம் கூலி தர இயலும். நிம்மதியாக பிறகு படிக்கவும் செய்யலாம். இந்தியாவில் உள்ள அனைத்து செல்லிடபேசி நிறுவனங்களும் தற்போது எங்கிருந்தும் இந்த E-Charge வசதி தருகிறது. ஒரு சில நிறுவனங்கள் அதை அவர்களின் இணைய தளம் வாயிலாகவே தர முயற்சி செய்கிறது. தற்போது செல்லிடபேசியின் வழியாக தொகைகளை அனுப்ப/பெற வசதியாக சில நிறுவனங்கள் Mobile Payment Gateway நிறுவி வருகிறது. இதில் செல்லிடபேசி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் சல்லி தேறுவதால் அவர்களும் விருப்பமாக களமிறங்க உள்ளனர். ஆக எதிர்காலத்தில் பணப்பை இல்லாமல் ஒரு செல்லிடபேசியே அதை செய்து முடிக்கும். கடையில் வாங்கிய பொருளுக்கு பணத்திற்கு பதிலாக கடைக்காரரின் செல்லிடபேசிக்கு தொகையை குறிப்பிட்டு ஒரு குறுந்தகவல். அவர் மொத்த வியபாரிக்கு ஒரு குறுந்தகவல். அப்படியே பணமானது குறுந்தகவலிலேயே பயணப்பட்டு கொண்டிருக்கும். அவ்வளவு தான், வேலை முடிந்தது. இதனால் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட நமது நாட்டின் காகித பணத்திற்கு இங்கு வேலை இருக்காது. அந்த கள்ளப்பணம் மெதுவாக செயலிழந்து விடும். அதற்கு நாமும் தயாராக வேண்டமா?


எதிர்காலத்தில் இன்னும் அற்புதமான வேலைகளை இந்த செல்லிடபேசி செய்யப்போகிறது. பிகேபியின் இந்த கைப்பேசி to கணிப்பேசி இடுகையை
படித்தால் இன்னும் விளங்க இயலும். நான் ஒரு தீக்கோழி மாதிரி. இந்த சீசனுக்கு இந்த பெரிய முட்டை(இடுகை) போதும். இனி அடுத்த சீசனுக்கு
தான். அது வரை பொறுமைசாலியாக காத்திருக்கவும். சென்று வருகிறேன் சகோதர, சகோதரிகளே. இதுவரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி.



with care & love,

Muhammad Ismail .H, PHD.,





உங்களின் வசதிக்காக அந்த படம் இங்கே,




Just Right click and Save As , Then Edit with your Prepaid mobile details as like me.

வருகை புரிந்த பொறுமையாளர்களின் வார்த்தைகள்