Related Posts with Thumbnails

49-O !!!

அன்பின் சகோதர, சகோதரிகளே,

இது 49-O என்று ஏகத்துக்கும் பிரபலமாக பேசப்பட்ட ஒன்றை பற்றியது. தேர்தலுக்கு பிறகு சிரிப்பாய் சிரிக்க போகும் நமது எதிர்காலத்தை பற்றியது. இந்த ஒன்றுக்கும் உதவாத 49-O ல ஓட்டு போட்டு யாருக்குமே உதவாக்கரையா போறது எப்படி என்று எல்லோருக்கும் விளக்கலாம் என்று இதை பதிந்தேன். 49-O ல ஓட்டு போடுறது என்பது எரியற கொள்ளிக்கட்டையால தலை செரியறது, சொந்த செலவில சூனியம் வைத்து கொள்வது, சும்மா இருக்கிற சனியனை பிடித்து பனியனுக்குள் விடுவது போன்ற அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு சமம்.

49-O வழியாக ஆப்பு வாங்குவது ? ச்சீ வாக்களிப்பது எப்படி ?
49-O ஓட்டு போட்ட மறு கணமே நீங்கள் அந்த பகுதியில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் வேண்டாத நபராக ஆகிவிடுவீர்கள். 49-O வை ரகசியமாக பதிய இயலாது. பிறகு எந்த ஒரு விஷயத்திற்கும் உள்ளூரில் எந்த அரசியல்வாதியின் உதவியையும் எதற்கும் பெற முடியாது. நீங்கள் தான் வாக்கு சாவடியில் பகிரங்கமாக எவனும் சரியில்லை என சொல்லி விட்டீர்களோ ! அவர்களிடம் ஏதாவது உதவிக்கு போனால் என்ன மசுருக்கு இங்கே வந்தே? என கேட்பார்கள். அதுக்கு அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொண்டு சும்மா வீட்டில் இருக்கலாம்.

உண்மையில் 49-O வில் பதிவது ஓட்டாக கருதப்படாது. வெறும் பதிவு தான் அது. உங்களின் வாக்கை 49-O வாக பதிந்து விட்டால் பிறகு உங்களின் பெயரை பயன்படுத்தி யாரும் கள்ள ஓட்டு போட இயலாது. அதற்கு தான் 49-O ஏற்பாடு. இது எந்த வகையிலும் தற்போதைய கேடுகெட்ட அரசியலை சுத்தப்படுத்த உதவாது.

இந்த 49-O ய வச்சி மெத்த படிச்ச மூஞ்சுறுகள் Cyber Bullying பண்ணதான் லாயக்கு. 49-0 வால ஒரு மசுரும் புடுங்க முடியாது. உதாரணமாக 100 (நூறு) வாக்காளர் உள்ள ஒரு தொகுதியில் 9 (ஒன்பது) வேட்பாளர்கள் போட்டியிட்டு அந்த தொகுதியில் உள்ள 90 (தொன்னூறு) வாக்காளர்களும் 49-O வாக பதிந்தாலும் 9 வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் அவரது வாக்கு மற்றும் கூடுதலாக அவரது சின்ன வீட்டின் வாக்கு இரண்டையும் பெற்று 1 (ஒரு) ஓட்டு வித்தியாசத்தில் மற்ற அனைவரையும் வெற்றி பெற்றவராக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு விடுவார். வேட்பாளரும் ஒரு வாக்காளர் தான். அவருக்கும் வாக்கு உண்டு. 98 பேரின் எதிர்ப்பையும் மீறி அந்த வேட்பாளர் 100 பேரின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்வார். இது தான் நமது தற்போதைய தேர்தல் நிலைமை. நம்மால் ஒன்றும் பண்ண இயலாது. இந்த கொடுமையிலிருந்து நம்மையே காப்பற்றி கொள்ள இயலாத போது சத்தியம் alias நியாயம் alias தர்மத்தை எப்படி காப்பற்ற இயலும். உண்மையில் இது கலிகாலம் தான்.

மேல் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/49-O

இதற்காகவாவது இந்த பதிவை எல்லா பதிவர்களின் பதிவிலும் காப்பி & பேஸ்ட் பண்ணினால்
தப்பே இல்லை. நாலு பேருக்கு இது விளங்கனும்ன, எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. வேற என்னத்தை சொல்ல? கையலாகாத நிலையை நினைத்து வெறுப்பாக வருகிறது.

குறிப்பு - இதை ஆராய்வதற்கு தூண்டுதலாக இருந்தது சுரேஷ் குமார் எழுதிய 49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!! இதற்கு பிறகு தான் தேர்தல் வேலைக்காக அந்த அலுவலர்களுடன் இணைந்து கணணிகளை சரி செய்யும் போது கேள்விகளால் அவர்களை குடைந்தெடுத்து இந்த விபரங்களை அறிந்து கொண்டேன்.


இதற்கு தீர்வு - 49-O விற்கு ஆதரவாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பட்டன் வைக்கும் போது 49-O வை அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் பொது வேட்பாளராக வைக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். இது எம்.பி கள் ஓட்டு போட்டு தான் சட்டமாக வரணுமாம். அவர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்களா என்ன?

with care and love,

Muhammad Ismail .H, PHD,

 

6 பின்னூட்டங்கள்:

சுரேஷ் குமார் said...

உங்கள் இடுகையில் குறிப்பிட்டுள்ள "http://en.wikipedia.org/wiki/49-O" என்ற தளத்தை இப்போது நானும் கண்டேன்..
அதில் நான்காவது (4th) தலைப்பில் (Disqualification hoax) எழுதி இருப்பது, என் இடுகையில் நீங்கள் தவறு என சுட்டிக்காட்டியுள்ள கருத்தானது /(வரிகள்) உண்மையில் சரி என்பதுபோலவே உள்ளதாய் நான் உணர்கிறேன்..

அந்த வரிகள்..
( Disqualification hoax
A hoax has been circulating which claims that if the '49-O' votes more than those of the winning candidate, then that poll will be canceled and will have to be re-polled. Furthermore, it claims that the contestants will be banned and they cannot contest the re-polling for their life time.)

நன்றி Muhammad Ismail .H, PHD..

ஷண்முகப்ரியன் said...

இன்றுதான் நானே இந்த 49-0 வின் தாத்பரியங்களைப் புரிந்து கொண்டேன்.நன்றி இஸ்மாயில் சார்.

Muhammad Ismail .H, PHD, said...

@ அன்பின் சுரேஷ் குமார்,

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? திறந்த பீர் பாட்டிலின் மூடியை முகர்ந்தது போல் எனக்கு தலை சுற்றுகிறது :-)). 49-O வால் தகுதி நீக்கம் (Disqualification) செய்ய இயலும் என மின்னஞ்சல் வழியாக பரப்புரை செய்யப்பட்ட தகவல் பொய்யானது. அதாவது ஆங்கிலத்தில் இதற்கு பெயர் Hoax மற்றும் தகவல்களின் மூலத்தை சரிவர ஆராயாமல் அதை அனைவருக்கும் அனுப்புவது Cyber Bullying.

இந்த 49-O வில் பதியப்படும் வாக்குகள் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவரை இந்த வாக்குகளை காரணம் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஆவதிலிருந்து தடுக்க முடியும் என நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். 49-O வில் பதிவது வாக்கே அல்ல. உங்களின் வாக்கை யாரும் உபயோகம் செய்யாமால் தடுப்பதற்கான ஒரு ஏற்பாடு தான் அது. இது பற்றி எழுத்தாளர் ஞானி கூறுவதை இந்த காணொளியில் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=ccK0O-Ppf1A


இதன் படி பார்த்தால் இந்த 49-O வில் பதிந்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகமானால் நாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க-லாம் !, பிறகு அவரை தகுதி நீக்கம் செய்ய-லாம் !, மறு தேர்தல் நடத்த-லாம்!. எல்லாம் வெறும் 'லாம்' கள் தான். வேறு லா(ப)ம் இல்லை. முன்னமே இதிலுள்ள நடைமுறைச்சிக்கலை மிக அழகாக கிராமத்து நடையில் பதிவிட்ட உங்களுக்கு நான் மேலும் விளக்கவேண்டியது இல்லை.


-----------


அன்பின் டைரக்டர் ஷண்முகப்பிரியன்,

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. இந்த பதிவை எழுதும் முன் நானும் அந்த 49-O ஒர் அருமையான சட்டம் எனக் கருதிக்கொண்டிருந்தேன். நல்லா குளோசப் ஷாட்டுல போய் பார்த்ததும் தான் தெரிந்தது அதுக்கு வாக்களிக்கும் நம்மை குளோஸ் பண்ணி அப்புல அனுப்பி வைக்கிறதுக்கான சட்டம் என !!!.

இதை நான் ஆராயக்காரணம் நம்ம சகோதரர் சுரேஷ் குமாரின் அந்த 49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!! தான். அந்த பதிவை படித்துவிட்டு தேர்தல் அதிகாரிகளிடம் கேட்ட போது தான் 49-O பற்றி நன்றாக விளங்கியது. தேர்தல் முடியட்டும். இறைவன் நாடினால் இன்னும் களத்தில் இறங்கி முழு விபரமும் சேகரித்து பதிகின்றேன். மேலும் அவர்களுக்கே இது பற்றி முழுமையாக தற்போது தெரியவில்லை. நான் அவர்களை ரொம்ப குடைந்தபோது அந்த பயிற்சி குறுந்தகடை கையில் கொடுத்து விட்டார்கள். அதிலுள்ள ஒரு பகுதியை தான் யூ ட்யூப்பில் தரவேற்றம் செய்தேன்.

மேலும் இந்த சட்டம் நாம் 'சத்ய யுகத்தில்' இருந்தால் நல்ல பயனை தரும். அப்ப ரொம்ப நல்லவங்க இருந்தார்கள். ஆனால் இந்த கலியுகத்தில் போய் இதை வைத்துக்கொண்டு நாம் என்ன பண்ணமுடியும் ? இதை நமது தேவைக்கேற்ப மாற்றுவது தான் புத்திசாலித்தனம். இல்லையென்றால் நம்மை ஆள்வது போலியான ஜனநாயகம் என்னும் உண்மையான பணநாயகம் !!!. தீர்வும் நான் பதிவில் கூறியதுதான்.


with care and love,

Muhammad Ismail .H, PHD,

Selvaraj said...

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே!

தவறான செய்தி என்பதால் என் பதிவை சேபிப்பில் வைத்துள்ளேன். உங்களின் கருத்தை அதில் வெளியிடலாமென நினைத்துள்ளேன்.

அன்புடன்.
செல்வராஜ்

Muhammad Ismail .H, PHD, said...

@ அன்பின் செல்வராஜ்,


தாரளமாக இந்த பதிவில் உள்ள கருத்துகளை எங்கும் எதிலும் உபயோகப்படுத்தலாம். அதற்கு எந்த ஒரு சிக்கலான நடைமுறையிம் கிடையாது.


with care & love,

Muhammad Ismail .H, PHD,

உஜிலாதேவி said...

ஒவ்வொரு குடிமகனும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை


எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

வருகை புரிந்த பொறுமையாளர்களின் வார்த்தைகள்